புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

by Editor / 25-06-2022 12:53:05pm
புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி - 1 கப், கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு. தாளிக்க எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1/2 டீஸ்பூன், வரமிளகாய் - 2, கறிவேப்பிலை - 6 இதழ்கள். மேலே தூவுவதற்கு அரிந்த கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை பச்சை பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பட்டாணியைச் சேர்த்து வதக்கி கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி கலந்துவிடவும். இப்போது சூப்பரான பட்டாணி கார சுண்டல் ரெடி.

பச்சை பட்டாணியை தவறாமல் எடுத்துகொள்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வராது. பட்டாணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.
 

 

Tags :

Share via