3 பிரமாண்ட கூட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

by Admin / 12-02-2022 12:59:13pm
3 பிரமாண்ட கூட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரம்


கொரோனா பரவல் காரணமாக 5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. ஆனால் சமீபத்தில் அந்த கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விலக்கிக் கொண் டது.
 
இதையடுத்து உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் தேர்தல் பிரசார நடைமுறைகளில் மாற்றங்கள் வந்துள்ளன.

அரசியல் கட்சிகள் வழக்கம் போல பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சியும் தீவிர தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி மூலம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளது.

குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் வருகிற திங்கட்கிழமை முதல் பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி 14, 16, 17-ந்தேதிகளில் 3 பிரமாண்ட பொதுக் கூட்டங்களுக்கு பா.ஜ.க. மேலிட தலைவர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இந்த 3 பிரமாண்ட கூட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். 14-ந்தேதி அவர் ஜலந்தரில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். 16-ந்தேதி பதன்கோர்ட் நகரிலும், 17-ந்தேதி அபோகர் நகரிலும் மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.

 

Tags :

Share via

More stories