அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

by Staff / 12-02-2024 03:50:26pm
அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி என் .டி. பி. எல் அனல் மின் நிலைய தொழிலாளர்களுக்கு உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். துணை தலைமை தொழிலாளர் ஆணையர் சென்னை முன் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி என்.டி.பி. எல் அனல் நிலையம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு என்.டி.பி.எல் அணுமின் நிலைய கிளை சார்பில் தலைவர் அப்பாதுரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில், ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கையை நிறைவேற்றி தரக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

 

Tags :

Share via

More stories