மாடுவளர்ப்பவர்களே ஜாக்கிரதை..இப்படியும் நடக்குது..

கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் சுற்றி திரியும் வீட்டில் வளர்க்கும் பசு மாடுகள் சுமார் 30க்கும் மேற்பட்ட பசு மாடுகள் காணாமல் போனதாக மாட்டின் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு, செல்லதுரை என்பவர் தனது பசுமாடு காணாமல் போனதாக போலீசில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் பசு மாட்டின் கயிற்றை இரண்டு பேர் பிடித்து செல்வது தெரிந்தது. இதையடுத்து சுற்றுவட்டார பகுதிகளில் பசுமாடுகளை கடத்தி சென்று இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த மாட்டிறைச்சி விற்பனை செய்த கடை உரிமையாளர் முகமது அசாரூதின் மற்றும் அவரின் உதவியாளர் மருது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Tags : மாடுவளர்ப்பவர்களே ஜாக்கிரதை..இப்படியும் நடக்குது..