உகாண்டா அதிபர் தேர்தலில் யுவேரி மூசேவேனி மீண்டும் அமோகமாக வெற்றி

by Admin / 19-01-2026 12:46:24am
உகாண்டா அதிபர் தேர்தலில் யுவேரி மூசேவேனி மீண்டும் அமோகமாக வெற்றி

உகாண்டா அதிபர் தேர்தலில் யுவேரி மூசேவேனி மீண்டும் அமோகமாக வெற்றி பெற்றார். 81 வயதான  ஏழாவது முறையாக யுவேரி மூசேவேனிஅதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தனது 40 ஆண்டு கால ஆட்சியை மேலும் அஞ்சு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளார் . உதாண்டா தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ முடிவின்படி மூசேவேனி 71.65 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவரும் பிரபல இசை கலைஞருமான பாபி வைன் 27.72 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி வாய்ப்பை இழந்துள்ளாா். இந்த தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சியினர் நிராகரித்துள்ளனர். வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்ததாகவும் தேர்தல் காலத்தில் இணையச் சேவை முடக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும்  மூசேவேனிஆப்பிரிக்காவின் மிக நீண்ட கால ஆட்சி செய்யும் தலைவர்களில் ஒருவர். இத்தேர்தலில் சுமார் 52 சதவீத வாக்காளர்களே வாக்களித்துள்ளனர்.

 

Tags :

Share via