இந்திய மின்சார விநியோக நிறுவனங்கள் 2,701 கோடி கூட்டு லாபத்தை பெற்றுள்ளன.

by Staff / 19-01-2026 01:18:18am
இந்திய மின்சார விநியோக நிறுவனங்கள் 2,701 கோடி கூட்டு லாபத்தை பெற்றுள்ளன.

இந்திய மின்சார விநியோக நிறுவனங்கள் மற்றும் மாநில மின்சார துறைகள் இணைந்து 2024-25 நிதி ஆண்டில் ரூபாய் 2,701 கோடி கூட்டு லாபத்தை பெற்றுள்ளன. பல ஆண்டுகளாக இழப்புகளை சந்தித்து வந்த இத்துறை தற்பொழுது லாபத்தை நோக்கி சென்றுள்ளது. மாநில மின்சார வாரியங்கள் பிரிக்கப்பட்டு நிறுவனம் ஆக்கப்பட்டதிலிருந்து விநியோக நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இழப்புகளை சந்தித்து வந்த நிலையில் முதல் முறையாக லாபத்தை ஈட்டியுள்ளன..கடந்த 2023 24 காலகட்டங்களில் 2,553 கோடி இழப்பையும் 2013- 2013 நிதி ஆண்டில் 67, 962 கோடி இழப்பையும் சந்தித்திருந்த நிலையில் தற்பொழுது 2,701 கோடி லாப வருவாயை பெற்றுள்ளது .இந்த செயல்திறன் மத்திய மின்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் முன் முயற்சி காரணமாக அடையப்பட்டுள்ளதாக மத்திய மின்சாரத்துறை அமைச்சர் மனோகர் லால் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo