4 மாதங்களில் 1000 பேருக்கு அரசு வேலை: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அடுத்த நான்கு மாதங்களில் 1000 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இளநிலை எழுத்தர், வி.ஏ.ஓ. உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். கூட்டுறவு பால் நிறுவன விழாவில் கலந்து கொண்டபோது இது தொடர்பான அறிவிப்பை ரங்கசாமி வெளியிட்டார். இது இளைஞர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவலாக அமைந்துள்ளது.
Tags :