by Staff /
05-07-2023
03:06:30pm
இமாச்சல பிரதேச மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அந்த பகுதிகளில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகள், கால்வாய்களில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. உனா மாவட்டத்தில் உள்ள ஹரோலிகாட் என்ற இடத்தில் பாலத்தை கடக்கும்போது கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. எவ்வாறாயினும், இந்த சம்பவம் குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே போல் கேரளாவிலும் கனமழையால் பெரும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
Tags :
Share via