by Staff /
05-07-2023
03:12:07pm
டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரம் அடைந்து, அதில் ஒருவர் துப்பாக்கியை எடுத்துச் சுடத் தொடங்கினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
Share via