தற்பெருமை என்பது தற்கொலைக்கு சமம்

by Admin / 13-01-2023 10:11:05am
தற்பெருமை என்பது தற்கொலைக்கு சமம்

அர்ஜீனன்-"கிருஷ்ணா,நீங்கள் இங்கே எனக்கு பல உபதேசங்களைக்கூறி,என்னை போருக்குத்தூண்டுகிறீர்கள்.அங்கே
துரியோதனன் கர்வம் கொண்டு தன்னுடைய பெருமைகளை கூறிக்கொண்டு இருக்கிறான்."
கிருஷ்ணர்-"அசுர புத்தி உடையவனுக்கு அழிவு காலம் வந்து விட்டால் தற்பெருமை பேசுவான்.தனக்கு வரப்போகும் அழிவை அவன் உணர .அவனுடைய அழிவுகாலம் நெருங்கிவிட்டது.ஆகவே தான் தற்பெருமை என்பது தற்கொலைக்கு சமம்.ஆகவே அந்த துரியோதனனைப்பற்றி நீ கவலைப்படாதே. அர்ஜீனா நீ உனது அண்ணனை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிவிடு.அப்படி திட்டினால் அது கொன்றதற்கு சமம் ஆகிவிடும்."
அர்ஜீனன்-"கிருஷ்ணா.எனது பாசத்திற்குரிய அண்ணனை நான் கண்டபடி திட்டி விட்டேனே,இதற்கு மேல் என்னால்உயிரோடு இருக்க முடியாது.இப்போதே நான் தீயை மூட்டி தற்கொலை செய்து கொள்வேன்"என்று அர்ஜீனன் தற்கொலை செய்து கொள்வதற்காக தயாரானான்.அப்போது கிருஷ்ணர் அர்ஜீனனனைத்தடுத்தார்.
கிருஷ்ணர்,"அர்ஜீனா ,நீ உன்னைப்பற்றி தற்பெருமைகளைப்பேசு.உன்னுடைய பெருமைகளையெல்லாம் எடுத்துக்கூறி ஆணவமாக தற்கொலை செய்து கொண்டதற்கு சசம் ஆகும்.அதன் பிறகு அர்ஜீனன் தன்னைப்பற்றி தற்பெருமைகளை எடுத்துக்கூறினான்.கடைசியில் அர்ஜீனனும்,யுதிஷ்டிரனும் மன ஆறுதல் அடைந்து ஒற்றுமையாக ஆனார்கள்.
 அர்ஜீனனின் வில் காண்டீபம்.அந்த வில்லை யாராவது அவமதித்து பேசினால் அவர்களை அர்ஜீனன் கொன்று விடுவதாக சபதம் எடுத்திருந்தான் .அர்ஜீனனின் அண்ணனாகிய யுதிஷ்டிரன் ஒரு நாள் காண்டீறத்தை பற்றி தரக்குறைவாக பேசினான்.அர்ஜீனன் உடன் வில்லை எடுத்து தன் அண்ணனை கொல்லமுயல..அப்பொழுது கிருஷ்ணர் தடுத்தார்.அப்பொழுது,அர்ஜீனன்,கிருஷ்ணா என் காண்டீபத்தை யார் குறை கூறினாலும் அவர்களை கொன்று விடுவதாக சபதம் எடுத்துள்ளேன் என்று கூற. அதற்கு ஒருவனை கொன்று விடுவதற்கு சமம் அவனைத் தகாத வார்த்தைகளால் திட்டினால் போதும் என்று விளக்கம் அளித்தார்.
 

 

Tags :

Share via