டீ போடவில்லை என மனைவியை கொன்ற கணவர்
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவர் தனது மனைவியிடம் டீ வேண்டும் எனக் கேட்டுள்ளார். அந்த பெண் மறுக்கவே ஆத்திரமடைந்த கணவர் அவரை கத்தியால் குத்தியுள்ளார். அதில் சரிந்து விழுந்த அந்த பெண்ணை மின்சாரம் தாக்கியதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :