போலீஸ் நிலையம் அருகே பிணமாக கிடந்த முதியவர்

கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் போலீஸ் நிலையம் அருகே இன்று காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊர் பெயர் என்ன எப்படி இறந்தார் என்பன போன்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :