கார்த்திகை தீப விழா டிசம்பர் 13-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
அக்னி ஸ்தலம் என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை யில் 64 அடி தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முதல் தொடக்க நிகழ்வு கோலாகலமாக நடந்தேறியது. கார்த்திகை மாதத்தில் மிக முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படும் கார்த்திகை தீப விழா டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மகா தீபம் ஆனது 5 அடி உயரம் 250 கிலோ எடை கொண்ட எடை கொண்ட கொப்பறையில் 3500 லிட்டர் நெய் கொண்டு ஆயிரம் மீட்டர் பருத்தி துணியால் திரிக்கப்பட்ட திரியில் மகா தீபம் ஏற்றப்பட்டு பதினோரு நாட்கள் தீபம் எரிய செய்வது ஐதீகம்.. பஞ்ச பூதங்களில் பரம்பொருள் சிவன் அக்னி வடிவத்தில் காட்சி தருகிறார் என்பது காலங்காலமாக நம்பப்படும் நம்பிக்கையின் வெளிப்பாடு, இத்தீபத் திருவிழா.
Tags :