மாணவியிடம் அத்துமீறிய பேருந்து நடத்துனர்

by Staff / 11-01-2024 11:51:04am
மாணவியிடம் அத்துமீறிய பேருந்து நடத்துனர்

கேரளாவின் ஆலப்புழாவில் பேருந்தில் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனியார் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டார். மண்ணஞ்சேரியைச் சேர்ந்த நியாஸ் (28) என்பவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இவர், பள்ளி மாணவியை பல முறை பேருந்தில் வைத்து துன்புறுத்தியுள்ளார். இது பற்றி வெளியே சொன்னால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மாணவியை எச்சரித்துள்ளார். தொடர்ந்து மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories