20 பக்கங்கள் கொண்ட நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர்
ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கைகளை ஆய்வு செய்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். 120 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது,
* முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது.
* தி.மு.க.வின் இலக்கை தெரிவிப்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது.
* துறை செயலாளர்கள் வெள்ளை அறிக்கை தயாரிப்புக்கு பெரிதும் உதவினார்கள்.
* ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கைகளை ஆய்வு செய்தேன்.
* மற்ற வெள்ளை அறிக்கைகளை விட கூடுதல் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
தடுப்பூசி
* தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கொரோனா தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தினோம்.
* இந்த வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் நான்தான் பொறுப்பு.
* இணையதளத்தில் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் - ரூ.23 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்டது
Tags :