பல்வேறு எதிர்பார்ப்புகளோடு வந்த புஷ்பா -2 .வெற்றி படம்.

by Admin / 06-12-2024 12:49:33pm
பல்வேறு எதிர்பார்ப்புகளோடு வந்த புஷ்பா -2 .வெற்றி படம்.

பல்வேறு எதிர்பார்ப்புகளோடு வந்த புஷ்பா 2 படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்த இத்திரைப்படம் புஷ்பா ஒன்று போல் இல்லாவிட்டாலும் படம் அதனுடைய தொடர்ச்சியாக வலுவாக கதை பின்னப்பட்டு ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக சண்டை காட்சி அமைப்பு பாடல் கிளாமர் என அனைத்தும் கலந்து உள்ளது அல்லு அர்ஜுன் மட்டும்தான் இந்தப் படத்தின் ஜீவன். முழுக்க முழுக்க அவருடைய நடிப்பையும் ஆக்சன் சண்டை காட்சிகளையும் கொண்டு படம் நகர்கிறது. சுகுமார் இயக்கத்தில் படம் வெற்றி நிலையையே எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செம்மர கடத்தல் கூலித்தொழியாக முதல் பாகத்தில் நடித்த அல்லு இரண்டாம் பாகத்தில் சிண்டிகேட் தலைவராக உயர்ந்து.. தம் மனைவி முதலமைச்சரோடு ஒரு போட்டோ எடுத்து வாருங்கள் என்று சொன்னதற்கு... முதலமைச்சர் தேர்தல் நிதி கொடுக்கிறாய் என்பதற்காக ஒரு கடத்தல் காரனோடு புகைப்படம் எடுக்க விரும்பவில்லை என்று சொன்னதற்கு.. கோபம் கொண்டு சித்தப்பா என்கிற ஒருவரை முதலமைச்சராக மாற்றுவது... கடத்தல் மரங்களை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக பகத் பாஸில் நன்றாக நடித்து தம் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இருப்பினும் அவர் பிடித்த மரங்கள் வேறு மரங்கள் என்பதை தெரிய வருகிற பொழுது மரம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற குடோனின் தாம் நெருப்பிட்டு இறந்து போகுவதாக காட்சி வடிவமைக்கப்பட்டு இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாக இருந்தாலும்.. அல்லு அர்ஜுன் தன் சகோதரர் குடும்பத்தோடு இணைந்து திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கிற பொழுது அவர் வீட்டை வெடிக் கொண்டு வைத்து வெடிப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டு படம் நிறைவு பெறுவது மூன்றாம் பாகத்தின் தொடர்ச்சி என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆக கதை மூன்றாம் பாகத்தை நோக்கி ஒரு எதிர்பார்ப்பை வைத்து முடிந்து இருக்கிறது.

 

Tags :

Share via