சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்கலைஞர் மு.கருணாநிதி மாடத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

by Admin / 17-03-2023 10:36:12pm
 சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்கலைஞர் மு.கருணாநிதி மாடத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மு.கருணாநிதி மாடத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த ஸ்டேடியம்  இன்று திறக்கப்பட்டது

.மைதானத்தின் பெவிலியன் பக்கத்தில்புதிய இருக்கைகள் கொண்ட,ரம்மியமான தோற்றம் கொண்ட ஸ்டேடியம் 2009-2010 களில் மறு வடிவமைப்புக்கு உட்படுத்தப்பட்டது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆன மூன்றாவது ஒரு நாள் போட்டி வருகிற 22 ந்தேதி  நடக்கவுள்ள நிலையில்  ,அதற்கு   முன்னதாகவே  இந்த ஸ்டாண்ட் முதலமைச்சரால்  திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

.இந்த புதிய  புனரமப்பு பெவிலியனுக்கு  மேல் முதல் தளத்தில் வீரர்களுக்கு விசாலமான  டிரஸ்ஸிங அறைகள்  ,உடற்பயிற்சிக்கூடம்,உட்புற வலைகள் வசதிகளையும் உள்ளடக்கியது.  இப்  புனரமைப்புத் திட்டத்தின்  தலைவர்
ரூபா குருநாத்  ஆவார். கடந்த 2021 ஏப்ரலில்   வேலைகளை ஆரம்பித்து கடந்த இரண்டு மாதங்களில் பணி முடிக்கப்பட்டுள்ளது .
.

 

Tags :

Share via

More stories

Logo