73 காவல் ஆய்வாளர்கள் மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக செயின் பறிப்பு, பாலியல் அத்துமீறல், திருட்டு, கொலை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடக்கிறது.இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர காவல்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடந்துவருகின்றன.
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கநடைபெற உள்ள நிலையில் சென்னை காவல் துறையில் அதிரடி மாற்றம் அரங்கேறி இருக்கிறது. இந்த நிலையில், சென்னை துரைப்பாக்கம், சாஸ்திரி நகர், ஐஸ் ஹவுஸ், ஐசிஎப், வாஷர்மேன்பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய ஆய்வாளர்கள் உள்ளிட்ட73 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு மட்டுமல்லாது, அனைத்து மகளிர் காவல் நிலையம், க்ரைம், குற்றப்பிரிவு உள்ளிட்ட அனைத்து காவல்துறைகளிலும் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags : 73 காவல் ஆய்வாளர்கள் மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு.