நடிகர் கங்கா மரணம்

by Staff / 11-11-2023 12:00:45pm
நடிகர் கங்கா மரணம்

நடிகர் கங்கா(63) மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் கங்கா. நடிகர் கங்கா தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். உயிருள்ளவரை உஷா, கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் உயிருள்ளவரை உஷா அவரது முதல் படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குணச்சித்திர பாத்திரங்கை ஏற்று அதிகம் நடித்தவர். நடிகர், இயக்குநர் டி.ராஜேந்திரனின் உயிருள்ளவரை உஷா திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.

 

Tags :

Share via