கார் விபத்தில் சிக்கிய மேற்கு வங்க முதல்வர் மம்தா

by Staff / 24-01-2024 04:59:39pm
கார் விபத்தில் சிக்கிய மேற்கு வங்க முதல்வர் மம்தா


மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பயணித்த கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பர்த்வான் நகரில் இருந்து கொல்கத்தாவுக்கு மம்தா காரில் பயணித்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. முதல்வரின் கான்வாய் வாகனத்தின் முன்பு கார் ஒன்று திடீரென வந்துள்ளது. இதையடுத்து, கார் ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டுள்ளார். இதனால், மம்தாவின் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories