சென்னை தரமணி பாலிடெக்னிக்கில் காவலாளி சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில்.....

by Admin / 28-01-2026 07:15:37pm
சென்னை தரமணி பாலிடெக்னிக்கில் காவலாளி சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில்.....

சென்னை தரமணி பாலிடெக்னிக்கில் காவலாளியாக பணியாற்றி வந்த பீகாரைச் சேர்ந்த கௌரவ்குமார் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அவரது உடல் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது. கௌரவ் குமார் தனது மனைவி முனிதா குமாரி மற்றும் குழந்தையுடன் சென்னைக்கு வந்து தரமணி பாலிடெக்னிக்கில் காவலாளி வேலைக்கு சேர்ந்து அங்கே தங்கி உள்ளார். கௌரவகுமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தையும் காணவில்லை பிடிபட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்களையும் கொலை செய்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக கவுரவ குமாரின் நெருங்கிய நண்பர்கள்  ஏழு பேரை காவல்துறையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்..தற்போதைய நிலவரப்படி காணாமல் போன மனைவி மற்றும் குழந்தையின் உடல்களை தேடும்பணியில்..... இரண்டு வயது குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், மனைவியின் உடலை  காவல்துறை தேடி வருகின்றனர். ஒன்பது நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐந்து தனிப்படை அமைத்து தடயங்களை காவல்துறை தேடி வருகின்றனர்..

 

Tags :

Share via

More stories