சென்னை மாநகரம் முழுவதும் பரவலாக இரண்டாவது நாளாக மிதமான மழை

by Editor / 06-10-2022 09:00:36am
சென்னை மாநகரம் முழுவதும் பரவலாக இரண்டாவது நாளாக மிதமான மழை

சென்னை மாநகரில் காமராஜர் சாலை, ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல், புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, நந்தனம், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக தற்போது மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழக மாவட்டங்களில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

காரைக்கால், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் செய்யூர் அச்சரப்பாக்கம் மேல்மருவத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் மிதமான தொடர் மழை பெய்து வருகிறது. 

 

Tags :

Share via