நகராட்சியில் மோதலில் ஈடுபட்ட அதிமுக.பாஜக .கவுன்சிலர்கள் மீது 5 பிரிவில் வழக்கு.

by Editor / 11-05-2023 09:14:46am
நகராட்சியில் மோதலில் ஈடுபட்ட அதிமுக.பாஜக .கவுன்சிலர்கள் மீது 5 பிரிவில் வழக்கு.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழுவின் கூட்டம் நகர்மன்ற  கூட்ட அரங்கத்தில் வைத்து 10ஆம் தேதி ஆணையாளர் பொறுப்பு ஜெயப்பிரியா தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திட்டக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது நகர் மன்ற தலைவர் ராம லெட்சுமி அந்த கூட்டத்தை விட்டு வெளியேறி தனது அலுவலகத்திற்கு வந்து அமர்ந்து கொண்டார், இதன் தொடர்ச்சியாக அதிமுக கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்து சென்ற காரணத்தை தலைவர் தெரிவிக்க வேண்டும் என்றும் தலைவர் உடனே வர வேண்டும் என்றும் ஆணையாளர் ஜெயபிரியாவை வலியுறுத்தினர் ஆனால் ஜெயப்பிரியா இது நகர் மன்ற கூட்டம் அல்ல.. திட்டக்குழு கூட்டம் இதில் அரசின் உத்திரவுப்படி கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி இருந்த அறைக்குள் அதிமுக கவுன்சிலர்கள்  சுடரொளி, ஜெகன், முத்துப்பாண்டி, பாஜக கவுன்சிலர் ராம்குமார் அதிமுக கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்றனர்.திடீரென நகர் மன்ற தலைவர் ராமலட்சுமிக்கும், நகர மன்ற உறுப்பினர் முத்துப்பாண்டி, ஜெகன், சுப்பிரமணியன், சுடர் ஒளி மற்றும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்  ராம்குமார் உள்ளிட்டோர் நகர்மன்ற தலைவரை மிகவும் ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசினர்.அப்பொழுது நாகர் மன்ற தலைவரும் பதிலுக்கு பேசிக் கொண்டிருந்த பொழுது வாக்குவாதம் மோதலாக உருவெடுத்தது. இதன் தொடர்ச்சியாக அதிமுக கவுன்சிலர்கள்  சுடரொளி,முத்துப்பாண்டி,பாஜக கவுன்சிலர் ராம்குமார், திமுக நகரமன்ற தலைவர் ராமலட்சுமியை தாக்க முயற்சி செய்தார்கள்  பாஜகவை சேர்ந்த ராம்குமார் சேர்மனுடைய டேபிளில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டு அவரை ஆபாசமாகவும் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அதிமுக கவுன்சிலர் சுடரொளி,முத்துப்பாண்டி ஆகியோர் நகர்மன்றத்தலைவரை தாக்க முற்ப்பட்டார்கள்.இதன் தொடர்ச்சியாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சுடர் ஒளி, திமுக நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி அருகில் சென்று அடித்து விடுவேன் என இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தபோது திடீரென சுடரொளி நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி தாக்க முயற்சி செய்த பொழுது ராமலக்ஷ்மி அதை தடுக்கும் விதமாக சுடரொளியை பிடித்து தள்ளினார். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.இதனை தொடர்ந்து நகரமன்ற தலைவர் அறையை விட்டு அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்களின் வெளியேறினார்.மேலும் நகர்மன்ற தலைவர் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.இதேபோல கவுன்சிலர் சுடரொளியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.மோதல் குறித்து நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து செங்கோட்டை போலீசார் அதிமுக கவுன்சிலர்கள் சுடர் ஒளி,முத்துப்பாண்டி பாஜக கவுன்சிலர் ராம்குமார் ஆகியோர் மீது ஐந்து பிரிவின்கீழ்  வழக்கு, 3 வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சுடர் ஒளி கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி மற்றும் திமுக கவுன்சிலர் பேபி ராஜப் பாத்திமா ஆகியோர் மீது 3 பிரிவின் கீழ் செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

 

Tags :

Share via