" தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார் - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.

பகுத்தறிவு பகலவன் என்றும் மண்டை சுரப்பை உலகம் தொழும் என்றும் போற்றப்பட்ட சுயமரியாதை உணர்வுகளை தமிழக மக்களிடம் -திராவிட மக்களிடம் விதைத்தவர்.. தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வே.ரா. பெரியாரின் நினைவு தினம் இன்று. அவரது நினைவு தினத்தன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்ததோடு -தம் கருத்துக்களை சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்! “கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம்! வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம்
Tags :