தமிழகத்தில் இடி.மின்னலோடு கூடிய மழைக்கு வாய்ப்பு.மீனவர்களுக்கான எச்சரிக்கை:

by Editor / 11-05-2023 07:33:55am
தமிழகத்தில் இடி.மின்னலோடு கூடிய மழைக்கு வாய்ப்பு.மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் நிலவுகிறது.

 

Tags :

Share via