தண்ணீரை வீணாக்கினால் ரூ. 2,000 அபராதம்
தேசிய தலைநகர் டெல்லியில் கடும் வெயில், குடிநீர் தட்டுப்பாடு போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க டெல்லி அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தண்ணீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் அதிஷி தெரிவித்தார். தண்ணீர் குழாய்கள் மூலம் கார்களை கழுவுதல், தண்ணீர் டேங்கர்கள் நிரம்பி வழிதல், பயன்படுத்திய தண்ணீரை கட்டுமானம் மற்றும் வணிக தேவைகளுக்கு பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :



















