பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

by Editor / 23-04-2025 09:45:14am
பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் துப்பாக்கி சூடு சம்பவத்தின் எதிரொலியாக, சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா வந்தடைந்தார். அரசுமுறைப் பயணமாக நேற்று சவுதி சென்றிருந்த பிரதமருக்கு அந்நாட்டு ராணுவ விமானங்கள் புடைசூழ கம்பீர வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று இரவோடு இரவாக பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார். பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
 

 

Tags : பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

Share via