நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் 4 பேர் கைது.

by Editor / 07-04-2025 03:20:46pm
நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் 4 பேர் கைது.

தென்காசி மாவட்டம் தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் ஆலய குடமுழுக்கு பெருவிழாவை நீதிமன்ற தீர்ப்பின்படி  தமிழில் நடத்திடவும் நீதிமன்ற ஆணையை அமல்படுத்தாத முறைகேடாக நடத்தப்படும் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா தொடர்பாக நேற்றைய தினம்
அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய பொழுது அதிகாரிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதை 
 கண்டித்து சத்தியபாமா அறக்கட்டளை தமிழ் வேத ஆகம பயிற்சி பாடசாலை நிறுவனத் தலைவி சத்தியபாமா தலைமையில் 4 சிவனடியார்கள் ராஜேந்திரன், தங்கவேலு, தமிழ்மணி, உட்பட நான்கு பேர்கள் கடையநல்லூரில் இரவு தங்கி இருந்த நிலையில் இன்று காலையில் தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தை   கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்ட நிலையில் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்  அடிப்படையில் புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சி நாதன் தலைமையிலான போலீசார் அவர்கள் நான்கு பேரையும்  கைது செய்தனர்.

 

Tags : நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் 4 பேர் கைது.

Share via