டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூணு மணி நேர கடையடைப்பு
இன்று தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று மணி நேர கடையடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று பிற்பகலில் 3:00 மணி நேரம் மூடப்பட்டிருக்கும். பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் .காலம் வரை ஊதியம் மற்றும் முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் .காலி மதிப்பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள கூடுதல் பணிபழுவை குறைக்க வேண்டும். பணி பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று போராட்டத்தை நடத்த உள்ளனர். இவர்களின், இந்த மூன்று மணி நேர போராட்டத்திற்கு மது கடைகளை திறப்பதிலும் விற்பனையை தொடர்வதிலும் எந்த வித தடையும் என்று செயல்பட வேண்டும் என டாஸ்மார்க் நிர்வாகம் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி உள்ளது .இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பிப்ரவரி 11 அன்று சென்னையில் மாபெரும் பேருந்து நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags :



















