ஜனநாயகன் படம்-தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்து வரும் 21 ஆம் தேதி வழக்கு விசாரணை
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் இன்று முக்கிய திருப்பம் நிகழ்ந்துள்ளது .காலை, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி ஆஷா ஜனநாயகம் படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். தணிக்கை வாரிய தலைவரின் மறு ஆய்வு முடிவை நீதிபதி ரத்து செய்தார். இதனை தொடர்ந்து தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அவசர மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த தலைமை நீதிபதி மோகன் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி .அருள்முருகன் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இவ் வழக்கில் போதிய கால அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியதை குறிப்பிட்டு நீதிபதிகள் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 21, 2026 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Tags :



















