செமி கண்டக்டர் மையமாக தமிழ்நாடு மாறும் - டி.ஆர்.பி.ராஜா

செமி கண்டக்டர் மையமாக தமிழ்நாடு மாறும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கைளை சந்தித்த டி.ஆர்.பி.ராஜா, "செமி கண்டக்டர் நிறுவனத்துக்கு தேவையான கருவி அமெரிக்காவில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்துள்ளது. சுமார் ரூ.10,000 கோடி முதலீட்டை ஈர்க்க சென்னை அருகே தைவான் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்" என கூறியுள்ளார்.
Tags :