மும்பை பங்குச்சந்தையில்  சென்செக்ஸ் 514 புள்ளிகள் உயர்வு

by Editor / 21-09-2021 05:05:20pm
மும்பை பங்குச்சந்தையில்  சென்செக்ஸ் 514 புள்ளிகள் உயர்வு

 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 514.34 புள்ளிகள் உயர்ந்து 59,005.27 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.88 சதவிகிதம் உயர்வாகும்.இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 165.10 புள்ளிகள் உயர்ந்து 17,562.00 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.95 சதவிகிதம் உயர்வாகும்.சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 11 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் காணப்பட்டது. எஞ்சிய 19 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

அதில் அதிகபட்சமாக ஹெச்.யு.எல். 1.18 சதவிகிதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 1.16 சதவிகிதமும், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் 1.09 சதவிகிதமும், பஜாஜ் ஃபைனான்ஸ் 1.02 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.

 

Tags :

Share via

More stories

Logo