கஞ்சா விற்பனை கும்பலுக்குள் மோதலால் பெட்ரோல் குண்டு வீச்சு.

by Staff / 22-09-2023 02:44:38pm
கஞ்சா விற்பனை கும்பலுக்குள் மோதலால் பெட்ரோல் குண்டு வீச்சு.

மதுரை மாவட்ட காவல் துறையானது கடந்த சில மாதங்களாக கஞ்சா, மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்மட்டு வருகிறதுஇந்நிலையில் நாச்சிக்குளத்தை சேர்ந்த பிரகாஷ் ( 27). திண்டுக்கல் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வல்லரசு (28). ஆகியோர் கஞ்சா விற்பனையில் கூட்டாளிகளாக இருந்துள்ளனர். பின்னர் பிரிவு ஏற்பட்டது.

இந்நிலையில் வெளியூர் நபர்கள் கஞ்சா விற்பனையை பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது. அவர்களுக்கு பிரகாசின் ஆதரவு இருந்துள்ளது.இந்நிலையில் நாச்சிகுளத்தை அடுத்த விசாலாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே பிரகாஷ் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்திருந்தபோது வல்லரசு தரப்பினர் பிரகாஷ் தரப்பினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதில் பிரகாஷ் உள்ளிட்ட சிலர் தப்பித்து விட்டனர். மாட்டிக் கொண்ட மதுரையைச் சேர்ந்த மார்க்கண்டேயனை வல்லரசு தரப்பை சேர்ந்தவர்கள் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.இதுகுறித்து சோழவந்தான் போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டில் ஈடுபட்ட 12, 13, 14 வயதுள்ள சிறுவர்கள் மற்றும் நாச்சிகுளம் பிரதாப் (25), டேவிட் (27) உள்பட 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories