12 பாஜக எம்பிக்கள் ராஜினாமா

by Staff / 06-12-2023 02:25:14pm
12 பாஜக எம்பிக்கள் ராஜினாமா

ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஒன்றில் காங்கிரஸும், மற்றொன்றில் ஜோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியைப் பிடித்துள்ளன. இந்தத் தேர்தலில் பாஜக எம்.பி.க்கள் 12 பேர் போட்டியிட்டனர். எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி பெற்ற பின், தங்கள் எம்.பி., பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளனர். இந்த தேர்தலில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த சூழலில் எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால், அந்த தொகுதிகள் காலியாகும். இன்னும் 5 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via