விழுப்புரம் மாவட்டத்தில் 8 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ரோஷணை போலீஸ் நிலையத்திற்கும், விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராணி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கும், திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த கலைச்செல்வி விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும்,
வானூர் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், அனந்தபுரம் சங்கரசுப்பிரமணியன் செஞ்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.
Tags :