மிரட்டும் விஷக் காய்ச்சல்

by Staff / 03-09-2023 03:45:58pm
மிரட்டும் விஷக் காய்ச்சல்

சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்வதால் மழைக் காலத்தில் பரவும் காய்ச்சல், வயிற்றுபோக்கு போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வைரஸ் காய்ச்சல் மட்டு மில்லாமல் விஷக்காய்ச்சலும் பரவுவதால் காய்ச்சல் தானே, வரும் போகும் என்று சாதாரணமாக இருப்பதும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். விஷகாய்ச்சலாக இருந்தால் கர்ப்பிணிகள், வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் ஆகியோரை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கி விடும். ரத்த நாளங்கள் உள்பட உடலில் பல பாகங்களில் வீக்கத்தை உருவாக்கும். இதனால் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

 

Tags :

Share via
Logo