அரசு ஊழியர்- ஆசிாியர்களுடன் அமைச்சர் குழுவினா் பேச்சு வாா்த்தை
சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை வருண் டிசம்பர் 22 2025 அன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் குழுவுடன் பேச்சு வார்த்தை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜாக்டோ,_ ஜியோ உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளனர். பழைய ஓய்வுது திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் ,அகவலப்படி உயர்வு, ஊதிய முரண்பாடுகளை கலைதல் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புதல் போன்றவை அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமானவை.. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ககல் தீப்சிங் பேடி குழுவின் அறிக்கை குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் ஜனவரி 2026, 6-ஆம் தேதிலிருந்து காலவரையற்ற வேலை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
Tags :



















