பாலியல் கொடுமை.. சிறுமியின் கருவை கலைக்க அனுமதி

by Staff / 22-04-2024 03:33:10pm
பாலியல் கொடுமை.. சிறுமியின் கருவை கலைக்க அனுமதி

மராட்டிய மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த சிறுமியின் கருவை கலைக்க சிறுமியின் பெற்றோர்கள் மருத்துவமனையை நாடியுள்ளனர். ஆனால், கரு 30 வாரங்களை தாண்டியதால் கலைக்க முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. அதுகுறித்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் விசாரித்தார். இதனால் சிறுமிக்கு ஆபத்து வருமா என மருத்துவமனை பதிலளிக்க உத்தரவிட்டார். பிரசவ கால ஆபத்தை விட குறைவு என்பதால் 30 வார கருவை கலைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories