இன்று பிரதமர் நரேந்திர மோடி முதலாவது ஹைட்ரஜன் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

by Admin / 17-07-2026 02:28:55am
இன்று பிரதமர் நரேந்திர மோடி முதலாவது ஹைட்ரஜன் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும் பொருட்டு இந்திய ரயில்வேயின் புதிய அறிமுகமான ஹைட்ரஜன் ரயில் இந்திய ரயில்வேயின் ஒரு மைல் கல். இந்த ரயில் ஹரியானாவின்  ஜிந்த்- சோனிபட் பட் இடையேயான 89 கிலோமீட்டர் தூரப்பகுதியில் இயக்கப்பட உள்ளது. இந்த தூரத்தை ரயில் 2 மணி நேரத்தில் கடக்கும் என்றும் இந்த வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் 12 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த நவீன ரயில் ,சென்னை பெரம்பூரில் உள்ள லோகோ தொழிற்சாலையில் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும். டீசலுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை பயன்படுத்தி காற்றில் உள்ள ஆற்றிசனுடன் வேதிவினை புரிந்து மின்சாரத்தை ரயிலிலேயே தயாரித்து கொள்ளும் நிலையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வாய்வு போன்ற நச்சுப் புகைக்கு பதிலாக வெறும் நீராவி மட்டுமே இந்த ரயிலில் இருந்து கழிவாக வெளியேற்றப்படும் இந்த ரயில் ரெண்டு பவர் கார்கள் மற்றும் எட்டு பயணிகள் பெட்டிகள் என மொத்தம் பத்து பெட்டிகளை கொண்டு 2600 பயணிகள் வரை பயணிக்கும் வசதியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு தேவையான ஹைட்ரஜன் ஜிந்து நகரில் பிரத்தியோக ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் எரிபொருள் நிரப்பும் மையத்தின் மூலமாக நிரப்பப்படுகிறது. ஜெர்மனி பிரான்ஸ் சீனா ஜப்பான் அமெரிக்கா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ஹைட்ரஜன் ரயிலை இயக்குவது குறிப்பிடத்தக்கது. இன்றிலிருந்து இந்த ரயிலின் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

இன்று பிரதமர் நரேந்திர மோடி முதலாவது ஹைட்ரஜன் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
 

Tags :

Share via

More stories

Logo