தாய்க்கு அடி, உதை; போலீஸ் அதிகாரியான தந்தையை அடித்துக் கொன்ற மகன்

டெல்லியில் உருட்டு கட்டையால் தந்தையை அடித்துக் கொன்ற 17 வயது மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்பிஎஃப்) பணியாற்றிய தந்தை தனது தாயை அடிப்பதைப் பார்த்த 17 வயது மகன் தந்தையைக் கொன்றுள்ளான்.
தந்தை குடித்துவிட்டு வந்து தாயை அடிக்கடி அடித்ததால் சிறுவன் தந்தையை அடித்துக்கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் நடந்த அன்று, இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்த தந்தை, சிறுவனை காலால் மிதித்து தள்ளி, தாயை துன்புறுத்தியுள்ளார். அப்போது அந்த சிறுவன் உருட்டுக்கட்டையை எடுத்து பலமுறை தனது தந்தையை அடித்துள்ளான்.
ஆகஸ்ட் 22 ஆம் தேதி, பஹர்கஞ்ச் வடக்கு ரயில்வே மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு கொலை பற்றிய தகவல் கிடைத்தது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
உடலில் 19 காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. உடலில் பல இடங்களில் காயங்கள் மற்றும் விலா எலும்புகள் உடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூளை பாதிப்பு மற்றும் அடியின் தாக்கத்தால் ரத்தம் கசிந்து மரணம் ஏற்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது' என வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையர் சாகர் சிங் கல்சி தெரிவித்தார்.
Tags :