ஐயப்ப பக்தர்களை குறிவைத்து ரசாயன பொடிகள் கலந்த 2 டன் மஸ்கோத் அல்வா,1 டன் சிப்ஸ் உள்ளிட்டவை பறிமுதல்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்பொழுது அய்யப்ப சீசன் காலம் என்பதால் தினமும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குற்றாலம் வந்துவிட்டு புனித நீராடி சபரிமலைக்கு சென்று வருகின்றனர் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்து புனித நீராடி விட்டு செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது குற்றாலம் வரும் ஐயப்ப பக்தர்களை குறிவைத்து குற்றாலத்தில் ஏராளமான தேத்தங்காய் சிப்ஸ் கடைகள் செயல்பட்டு வருகின்றன மேலும் மஸ்கோத் அல்வா என்கின்ற அல்வா கடைகளும் செயல்பட்டு வருகின்றன குற்றாலத்தில் உள்ள சில பகுதிகளில் தரம் குறைவான ரசாயன பொடிகள் பயன்படுத்தப்பட்ட மஸ்கோத் அல்வா உள்ளிட்டதைகள் தயார் செய்யப்படுவதாக தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியனுக்கு புகார்கள் சென்றதைத் தொடர்ந்து அவர் இன்று குற்றாலம் லெட்சுமிபுரம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது சன் சிப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏராளமான குடோன்கள் அந்த பகுதியில் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது, மேலும் அந்த குடோன்களில் ரசாயனம் கலக்கும் பிளாஸ்டிக் கேன்களில் மஸ்கோத் அல்வா தயார் செய்வதற்காக மைதா மாவுகள் பேரல் பேரலாக கலக்கி வைத்திருந்ததும், மஸ்கோத் அல்வா கலர் சாயம் பொடிகள் கலக்கப்பட்டு தயார் செய்வதும் கண்டறியப்பட்டது, மேலும் தொடர்ந்து அந்த குடோனில் உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்ரமணியன் நடத்திய அதிரடி சோதனையில் 4 ஆயிரத்து 230 கிலோ மஸ்கோத் அல்வா விற்பனைக்கு தயாராக இருந்ததில் ரசாயன பொடிகள் கலந்த 2 ஆயிரம் கிலோ மஸ்கோத் அல்வாவையும், விற்பனைக்கு தயாராக மூட்டை மூட்டையாக பாலிதீன் கவர்களில் கட்டியும்,பேக்கிங் செய்யபபட்டநிலையில் இருந்த 2900 கிலோ சிப்ஸ் பாலிதீன் மூட்டைகளில் முறையான பேக்கிங் செய்யபாடாமலும், மற்றும் காலாவதி தயாரிப்பு தேதிகள் இல்லாத 1 டன் சிப்ஸ் இருப்பதும் அவரது ஆய்வில் கண்டறியப்பட்டன.மேலும் 7 பேரல்களில் மஸ்கோத் அல்வா தயார் செய்ய மைதாமாவு கலக்கிவைக்கபட்ட கலவைகள், 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட
பயன்படுத்தப்பாட்டை தகர டின்களை மீண்டும் பயன்படுத்தி 60 கேன்களில் பாமாயில் உள்ளீட்டைவைகளையும்,120 கிலோ பேரிச்சம் பழம் உள்ளிட்டவைகளை அவர் கண்டறிந்தார்.இதில் 2 டன் மஸ்கோத் அல்வா,1டன் சிப்ஸ் ஆகியவற்றை மட்டும் பறிமுதல் செய்து குற்றாலம் பேரூராட்சி உரக்கிடங்கில் கொண்டு சென்று பினாயில் ஊற்றிஅழிக்கப்பட்டது.மேலும் அனுமதி பெறாமல் குடோன்கள் வைத்து உணவு பொருட்களை தயாரித்ததற்காக 21 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.இதில் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட
பயன்படுத்தப்பாட்டை தகர டின்களை மீண்டும் பயன்படுத்தி 60 கேன்களில் பாமாயில் உள்ளீட்டைவைகளையும்,120 கிலோ பேரிச்சம் பழம் உள்ளிட்டவைகளை 5 ஆம் தேதி ஆய்வுக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் அவர் தெரித்துள்ளார்.
Tags : ஐயப்ப பக்தர்களை குறிவைத்து ரசாயன பொடிகள் கலந்த 2 டன் மஸ்கோத் அல்வா,1 டன் சிப்ஸ் உள்ளிட்டவை பறிமுதல்.