விமானப்படையினரின் சாகச பயிற்சி;
நாட்டில் 90-வது இந்திய விமான படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லிக்கு வெளியே முதன்முறையாக பஞ்சாப்பின் சண்டிகர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய விமான படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி கலந்து கொண்டார். இந்த தினத்தை முன்னிட்டு வீரர்கள் செய்த சாகச பயிற்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. வீரர்கள் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு நடத்தியபடி, பல்வேறு சாகச காட்சிகளையும் செய்து காண்பித்தனர். இதனை பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்தபடி, இந்திய விமான படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி தனது குடும்பத்தினருடன் பார்வையிட்டார்.
Tags :