, பிரசவ வார்டில், பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் போலி டாக்டருக்கு வலைவிச்சி
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பிரசவ வார்டில், பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், மகப்பேறு வார்டு தனியாக உள்ளது. இங்கு, செங்கல்பட்டு மாவட்டமின்றி, காஞ்சிபுரம், திருவண்ணமாலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணியர், பிரசவத்திற்காக வருகின்றனர்.
மகப்பேறு பிரிவின் ஓர் அறையில், பிரசவத்திற்கு வரும் இருவருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்நிலையில், 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், மேற்கண்ட பிரிவில், நேற்று முன்தினம் நுழைந்தார். அங்கிருந்த பெண்களிடம் தான் டாக்டர் எனக்கூறி, சிகிச்சை அளிப்பது போல், பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்தார்.
பின், மொபைல் போனில் படம் எடுக்க முயன்றபோது, அங்கிருந்தோர் கூச்சலிடவே, அனைவரும் வருவதற்குள், மர்ம நபர் தப்பியோடினார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர், செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவில் பதிந்த மர்ம நபர் படத்தை வைத்து விசாரிக்கின்றனர்.
Tags :



















