சபரிமலையில் நிறை புத்தரி பூஜை

சபரிமலை நிறை புத்தரி பூஜை வரும் 12-08-24 திங்கட்கிழமை காலை 5.45 மணி முதல் 6.30 மணிக்குள் நடைபெறுகிறது. அதற்காக பிரத்தேயகமாக 1-1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு நடை திறக்கப் படுகிறது.நிறை புத்தரி பூஜைக்கான நெல் கதிர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அச்சன்கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது..
இதற்கான ஏற்பாடுகளை திரு ஆபரணக் கமிட்டி தலைவர் தென்காசி ஏ..சி..எஸ்..ஜி.. ஹரிஹரன், உபதேச கமிட்டி தலைவர் பிஜூலால், அச்சன்கோவில் தேவசம் நிர்வாக அதிகாரி துளசிதரன் பிள்ளை ஆகியோர் செய்து வருகிறார்கள்., ஒவ்வொரு ஆண்டும், கேரளாவில் அனைத்து முக்கிய திருக்கோவில்களிலும் ஆடி மாதத்தில் புதிய நெல்கதிர்கள் வைத்து நிறை புத்தரி பூஜை நடத்தப்படுகிறது.
நெல் கதிர்கள் ,சுவாமிக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கபடும். நெல்கதிர்களை வாங்கி வீடுகளில் வைக்க ஜஸ்வரியம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் ,நெல்கதிர் பிரசாதம் வாங்க, பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நிறை புத்தரி நாளில் நெல்கதிர்களில் இருந்து கைகுத்தல் மூலம் புது அரிசி எடுத்து சுவாமி ஐயப்பனுக்கு அரிசி பாயாசம் நைவேத்தியம் செய்து படைக்கபடும்.. வரும் 12 -ஆம் தேதி, திங்கட்கிழமை காலை 5.45 முதல் 6.30 மணிக்கு நிறைபுத்தரி பூஜை நடைபெறும்என்பது குறிப்பிடத்தக்கது..
Tags : சபரிமலையில் நிறைபுத்தரி பூஜை