பள்ளியில் மாணவர்களிடையே மோதல் 6 பேர் கைது சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு :

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே புதூரில் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி உள்ளது.மாணவர் பேரவை தலைவர் தேர்வு செய்வதில் இரு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் தாக்கப்பட்டார். பள்ளி நிர்வாகம் முதலில் தகராறில் ஈடுபட்ட மற்றும் காயமடைந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து சமரசம் செய்தது. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவன் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. வள்ளியூர் போலீசார் 7 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். 6 பேர் நெல்லையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
Tags : பள்ளியில் மாணவர்களிடையே மோதல் 6 பேர் கைது சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு :