ஒரு மாநிலத்தில் பிரச்சனை என வந்தால் ஆட்சி கலையும் பட்சத்தில் அத்தனை இடங்களிலும் தேர்தல் நடத்தமுடியுமா -சீமான் கேள்வி

by Editor / 13-02-2022 03:45:07pm
ஒரு மாநிலத்தில் பிரச்சனை என வந்தால் ஆட்சி கலையும் பட்சத்தில் அத்தனை இடங்களிலும் தேர்தல் நடத்தமுடியுமா -சீமான் கேள்வி

தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நம் தமிழர்கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் சீமான் திவீரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இதன்தொடர்ச்சியாக இன்று நெல்லையில் பிரச்சாரம் செய்ய வந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்,அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்பது சர்வாதிகாரப்போக்கு.பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்தது.ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தான் தேர்தல் ஆணையம் செயல்படும்.அதிமுக தேர்தலில் ஆட்களை கடத்தவில்லை.திமுக ஆட்சியில் ஆள் கடத்தல் நடக்கிறது,தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கடத்தி அடைத்து வைத்து மிரட்டுகிறார்கள்.அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் கருத்துரிமையை முடக்குகிறார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது.ஒரு மாநில தேர்தலையே  பலகட்டமாக நடத்துகிறார்கள்.
ஒரு மாநிலத்தில் பிரச்சனை என வந்தால் ஆட்சி கலையும் பட்சத்தில் அத்தனை இடங்களிலும் தேர்தல் நடத்தமுடியுமா.தேர்தல் அமைப்பு முறையில் சீர்திருத்தம் செய்வதை விட்டுவிட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் என சொல்கிறார்கள்.இந்தியாவில் பயன்படுத்தும் வாக்கு இயந்திரங்களை தயாரிக்கும் ஜப்பான் வாக்கு பதிவு முறையில் தான் தேர்தலை நடத்துகிறது என  சீமான்  செய்தியளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

 

Tags : If there is a problem in a state, will it be possible to hold elections in all the places if there is an art of governance - Seeman question

Share via