நின்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

by Staff / 09-01-2023 03:59:12pm
நின்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் காலி வேலம்பட்டி பிரிவில் மயில்சாமி என்பவரது சொகுசு கார் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலும் அனைத்தனர். தொடர்ந்து இன்று காலையில் மயில்சாமி வாகனத்தை இயக்க முற்பட்டபோது திடீரென எலக்ட்ரிக்கல் காரணமாக இன்ஜினில் புகை வந்து திடீரென தீ பற்றியதும் இதனால் சாவியை எடுத்துக்கொண்டு வாகனத்திலிருந்து அவர் வெளிவந்து தீயை அணைக்க முற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் கேஸ் பொருத்தப் பட்டு இயங்கப்படும் இந்த கார், ஸ்டார்ட் செய்யும் போது ஸ்பார்க் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது

 

Tags :

Share via

More stories

Logo