காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது

ஒடிசா கடலோரப் பகுதிகளையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானதாக இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்தது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும் என கூறப்பட்டது. இந்நிலையில் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
Tags : காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது