சிறுமியை பலாத்காரம் செய்து குளத்தில் வீசிய கொடூரம்

அசாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள டிங் பகுதியில் நேற்று (ஆக.22) டியூஷனுக்குச் சென்ற 14 வயது சிறுமியை மூன்று பேர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அருகில் உள்ள குளத்தில் வீசிவிட்டுச் சென்றனர். அந்த வழியாக சென்ற சிலர் குளத்தில் சிறுமி கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சிறுமியை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Tags :