தென்காசி மாவட்டத்தில் நாட்டு செங்கல் சூளை தடையால் 30, 000 குடும்பங்கள் வாழ்வாதாரம் இழப்பு..?

by Editor / 13-08-2024 11:50:26pm
 தென்காசி மாவட்டத்தில் நாட்டு செங்கல் சூளை தடையால் 30, 000 குடும்பங்கள் வாழ்வாதாரம் இழப்பு..?

தென்காசி மாவட்டம் சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான நாட்டு செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. தற்போது இந்த செங்கல் சூலைகள் கட்டுப்பாட்டு விதிப்பால் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கி ராஜா மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.அந்த மனுவில்,
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் சிறிய செங்கல் சூளைகள் நடத்துவதன் மூலம் 30 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்தச் செங்கல் சூளைகள் கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வந்த சூழ்நிலையில் சிறிய செங்கல் சூளைகளை நிறுத்தம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனால் இந்த தொழிலை நம்பி இருக்கும் 30 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. இந்த தொழில் திடீரென நிறுத்தப்பட்ட காரணத்தினால் ஏற்கனவே ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே சிறிய செங்கல் சூளை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் இந்தப் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி திட்டமிட்டு செங்கச் சூலை விவகாரத்தில் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் மேலும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்தார் அவர் கூறுகையில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை ஏன் சீமான் தடுக்கவில்லை அது குறித்து மனு அளிக்கவில்லை எனவும் தமிழகம் முழுவதும் தமிழர்களை கெடுப்பதற்காக அனைத்து இடங்களிலும் யார் என்ன செய்கிறார் என்று பார்த்து மனு அளித்து அதற்கு காசு பெறுவது தான் நாம் தமிழர் கட்சியா எனவும் அவர் கூறினார் செங்கச் சூலை விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால் ஜனநாயக ரீதியாக உண்ணாவிரத போராட்டத்தை அறிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Tags : தென்காசி மாவட்டத்தில் நாட்டு செங்கல் சூளை தடையால் 30, 000 குடும்பங்கள் வாழ்வாதாரம் இழப்பு..?

Share via